உணவின் மூலம் அழகு பெறலாம்
தினமும் ஒரு வகைப் பழத்தை உணவிற்கு முன்பு சாப்பிட வேண்டும். இரண்டு உணவுகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் ஒரு பழத்தினை சாப்பிடுவது நல்லது.
மதிய உணவின் போது எலுமிச்சை சாறு அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டால் சருமம் பொலிவு பெறும்.
கருமையான கூந்தலைப் பெற உணவில் கருவேப்பிலையை அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
முட்டை, பால் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பற்கள் பளிச்சிடும்.
வயிற்றில் இருக்கும் பிரச்சினையைத்தான் உதடு வெடிப்பு காட்டுகிறது. எனவே, தேங்காய் பாலை வெறும் வயிற்றில் அருந்துவது வயிற்றுப் புண்ணை ஆற்றும்.
No comments:
Post a Comment