Saturday, 27 September 2014

கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய பழ வகைகள்

கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய பழ வகைகள்


கர்ப்ப காலத்தில் பெண்கள் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் அந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும் போதும் கவனமாக இருக்க வேண்டும். அந்த வகையில் கர்ப்பிணிகள் சாப்பிடும் பழங்களில் ஒன்று தான் ப்ளம்ஸ்.
இந்த பழம் சிறியதாக இருந்தாலும், இப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணிகள் தங்களது உடலில் நீர்ச்சத்தின் அளவை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அவ்வப்போது ப்ளம்ஸ் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் நீர்ச்சத்தின் அளவானது அதிகரிக்கும் ப்ளம்ஸ் பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை எடுத்துக் கொண்டால், இது செரிமான பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
மேலும் மலச்சிக்கலால் அவஸ்தைப்படும் கர்ப்பிணிகள் ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பது நல்ல நிவாரணத்தைத் தரும். ப்ளம்ஸ் பழ ஜூஸில் வைட்டமின்கள் எண்ணற்ற அளவில் உள்ளன. அதிலும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஏ பார்வைக்கும், வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் வைட்டமின் கே இரத்த உறைவு ஏற்படாமல் இருக்கும்.
கர்ப்ப காலத்தில் நோய்த்தொற்றுகளின் தாக்கத்தை தடுக்க வேண்டுமானால், ப்ளம்ஸ் ஜூஸ் குடியுங்கள். இது தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும். குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான எலும்புகளின் வளர்ச்சி வேண்டுமானால், கால்சியம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கால்சியம் பாலில் மட்டுமின்றி, ப்ளம்ஸ் பழத்திலும் உள்ளது. ஃபோலிக் ஆசிட் ப்ளம்ஸ் பழத்தில் அதிகளவு உள்ளது. குழந்தையின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் இன்றியமையாதது.
எனவே கர்ப்பிணிகள் ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை ப்ளம்ஸ் ஜூஸ் குடிப்பதன் மூலம் வெளியேற்றலாம்.
ப்ளம்ஸ் எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அது பிறப்புக் குறைபாட்டினை ஏற்படுத்திவிடும். எனவே அளவோடு சாப்பிட்டு அலாதியான நன்மைகளைப் பெறுங்கள்.

No comments:

Post a Comment