Friday, 26 September 2014

பெண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

பெண்கள், தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

உங்கள் கணவர்களுக்காக பெண்களே உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய சில விஷ யங்களை இங்கே பார்ப்போம்.
உங்கள் கணவர் உங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அனைத்து பெண்களுக்குமே கணவர் மெச்சும் மனைவியாக இருக்க ஆசை தான். ஆனால் மனைவிகளின் சில செயல்கள்தான் கணவன்மார் களுக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் எதுவும் கூறாமல் பொறுத்துக் கொள் கிறார்கள். அப்படி கணவருக்கு பிடிக்காத சில விஷயங் களை மாற்றிக்கொண்டால் உங்கள் வாழ்க்கை இனிய வாழ்க்கையாக இருக்கும் அல்லவா?.
பெண்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்
ஷாப்பிங் என்ற வார்த்தையைக் கேட்டாலே பல கணவன்கள் தெறித்து ஓடுகிறார்கள். காரணம் கடை, கடையாக ஏறி இறங்கவேண்டுமே. பெண்களே ஷாப்பிங் போகும்போது சக பெண் களுடன் செல்லுங்கள் இல்லை என்றால் கணவரை அழைத்துச் சென்றால் அவரை அலைக் கழிக்காதீர்கள்.
உங்களது கணவருக்கு எந்த உணவு பிடிக் கும் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு, அவர் எப்போது வந்தாலும் உணவை சூடா கவும் சுவையாகவும் சமைத்து, நீங்கள் அவர் அருகே அமர்ந்து காதலை நெஞ்சிலே சுமந்து, புன்னகையுடன் மகிழ்ச்சியாக பேசி பறிமாருங்கள். சில வாய் அவருக்கு உங்கள் மலர் போன்ற‌ கரங்களால் ஊட்டி விடுங்கள். உங்கள் கணவர் சாப்பிட்டு முடிக்கும் வரை குடும்ப பிரச்ச‍னைகளை பேசாமல் இருக்க‍ வேண்டும்.
டிவி சீரியலே கதி என்று கிடக்காதீர்கள். சீரியல் விளம்பரத்திற்கு நடுவே கணவனுக்கு சாப்பாடு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் சீரியலை பார்த்து அழுவது  கண வனுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் விஷ யம் என்று தெரியுமா?
கணவரிடம் பிற பெண்களைப்பற்றியும், அவர்கள் வீட்டில் நடப்ப வை பற்றியும் புரளி பேசாதீர்கள். ஆண்களுக்கு பிடிக்கா த விஷயம் இந்த புரளி.
உங்கள் இருவருக்கும் இடையே நடக்கும் தாம்பத்தியத்தில் அவரா கவே வரட்டும் என்று காத்திருக்காமல்,  உங்கள் கண வருக்கு பிடித்த‍மானதை முதலில் நீங்க ளே தொடங்குங்கள்
கணவன்மார்களை அவர்களின் நண்பர்க ளுடன் நேரம் செலிவிட அனுமதியுங்கள். நான் ஒருத்தி வீட்டில் இருக்கேன் என்ன நீங்க நண்பர்களோட வெளியே போகிறது என்று கேட்காதீர்கள்.

No comments:

Post a Comment